கருப்புப் பணத்துக்கு எதிராக தாம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு பொது மக்களின் ஆதரவு உள்ளதாக பிரதமர் மோடி சனிக்கிழமை தெரிவித்தார்.
உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட விவகாரத்தில், மத்திய அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் மேற்கண்ட கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற "உலக குடிமக்கள் திருவிழா'வில் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது:
நாட்டில் சுத்தத்தை பராமரிப்பதற்காக தொடங்கப்பட்ட "தூய்மை இந்தியா' திட்டம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. அதேபோல, கருப்புப் பணத்தை துடைத்தெறிவதற்காக நான் மேற்கொண்ட நடவடிக்கைக்கு பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவு உள்ளது.
கருப்புப் பணம், ஊழல் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பதை தடுப்பதற்காகவே, உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற முடிவு செய்தோம். இந்த நோக்கம் நிறைவேறுவதற்காக, எங்களுடன் தோளோடு தோள் கொடுத்து உதவி வரும் பொதுமக்களுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன் என்றார் மோடி.
English Summary : Popular support for action against black money.Black money stand against the action of public support to be prime minister, Modi said Saturday.High-value banknotes invalidating the declaration on the issue, the federal government, the opposition criticized the conditions in which the above comment, he said.