சென்னை,: 'தனக்கு பின்னால், தொண்டர்கள் இல்லை என்பதை உணர்ந்து, கூட்டம் சேர்க்க, மாற்று கட்சியினரை ஸ்டாலின் இழுக்கிறார்' என, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
ஒவ்வொரு கட்சிக்கும், ஒவ்வொரு கொள்கை உண்டு. கட்சிக்கு தலைவர்களையும், நிர்வாகிகளையும் தேர்வு செய்யும் அதிகாரம், கட்சி உறுப்பினர்களுக்கு உள்ள உரிமை. தி.மு.க.,வில், பொருளாளர் ஸ்டாலினைபுகழ்ந்தவர்கள் தான், இன்று அக்கட்சியில் உயர் பதவியில் உள்ளனர்.
மூத்த தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டுள்ளதை, மக்கள் அறிவர். தனக்கு பின்னால், தி.மு.க., தொண்டர்கள் இல்லை என்பதை உணர்ந்து, கூட்டம் சேர்க்கவே, மாற்று கட்சியினரை, ஸ்டாலின் இழுக்கிறார்.இதற்காக, அனைத்து சக்திகளையும்உபயோகிக்கிறார்.
'கட்சியில் முதன்மை இடத்தில் வைப்பேன்' என, ஆசைவார்த்தை கூறி, ஆள் சேர்த்து வருகிறார்; இதுவா கட்சியை வளர்க்கும் விதம்.மாற்று கட்சியினரை அழைத்து வந்து, பொதுக்கூட்டத்தை கூட்டி, தி.மு.க.,வில் சேர்ப்பது முறையா; இதன் மூலம்ம
க்களிடத்தில், தான் தான் தி.மு.க., தலைவர் என்ற பிரமையை ஏற்படுத்துகிறார். உண்மையில், தி.மு.க.,வுக்கு தலைவர் கருணாநிதியா அல்லது ஸ்டாலினா?இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
English Summary:
'behind him, realizing that there are no volunteers, meeting, alternative parties wooing Stalin as' DMDK, chairman, accused Vijayakanth.