கான்பூர் : உ.பி., மாநிலம் கான்பூர் அருகே, பாட்னா - இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானதில் 63 பேர் பலியாகி உள்ளனர். காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பலி எண்ணிக்கை உயரலாம் :
பாட்னா - இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் 14 பெட்டிகள் இன்று அதிகாலை 3 மணியளவில் தடம்புரண்டு விபத்திற்குள்ளாகின. இதில் எஸ் 2 பெட்டி மிக மோசமாக சேதமடைந்துள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதுவரை 45 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. 150 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை மோசமாக இருப்பதாலும், மீட்புப் பணிகள் இன்னும் நிறைவடையாததாலும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இதுவரை 63 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மீட்புப் பணியில் பேரிடர் குழு :
மீட்புப் பணியில் போலீசார் மற்றும் மீட்புப் படையினருடன் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். மருத்துவக்குழுவும் வரவழைக்கப்பட்டுள்ளது. கூடுதல் ஆம்புலன்ஸ்கள் மற்றும் பஸ்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உ..பி., முதல்வர் அகிலேஷ் தெரிவித்துள்ளார். மத்திய ரயில்வே இணையமைச்சர், உ.பி., அமைச்சர்கள் ஆகியோர் மீட்புப் பணிகளை நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். விபத்து குறித்து தகவல் பெறுவதற்காக அவசர அழைப்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. விபத்து காரணமாக அவ்வழியாக செல்லும் ரயில்கள் அனைத்தும் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
English Summary:
Kanpur, UP, New York, near Kanpur, Patna - Indore Express train crash, 63 people have died aberrations. Disaster recovery teams, rescue personnel were injured.