சென்னை, மூன்று தொகுதி தேர்தலில் வாக்களிக்க தகுந்த ஆவணங்களின் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளில் பறக்கும் படையினர் மேற்கொண்ட பரிசோதனை நடத்தி வருகிறது. இந்த அதிரடி சோதனையில் 13.69 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அரவக்குறிச்சியில் ரூ.45 லட்சமும், தஞ்சாவூரில் ரூ.9.14 லட்சமும், திருப்பரங்குன்றத்தில் ரூ.4.09 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று தொகுதிகளில் தேர்தல் பார்வையாளர்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூரில் 2 சிறப்பு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரவக்குறிச்சியில் 4 சிறப்பு தேர்தல் பார்வையாளர்களும், தஞ்சாவூரில் 3 சிறப்பு பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
3 தொகுதிகளிலும் வரும் 19-ம் தேதி வாக்குபதிவு நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். தேர்தல் கருத்து கணிப்பு வெளியிட நவம்பர் 19-ம் தேதி மாலை 5.30 மணி வரை தடை விதிக்கப்படுகிறது. நவம்பர் 19-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியிடக்கூடாது. வாக்காளர் அல்லாதோர், நாளை (இன்று) மாலை 5 மணிக்குள் தொகுதிகளைவிட்டு வெளியேற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் நடைபெறவுள்ள 3 தொகுதிகளில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத அத்தகைய வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக பின்வரும் மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனுமொன்றை காண்பிக்க இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.
பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ், மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களால் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள், வங்கி, அஞ்சல கணக்கு புத்தகங்கள் (புகைப்படத்துடன் கூடிய), பான் கார்டு, ஆதார் கார்டு, ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை, மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், தேர்தல் நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட அனுமதியளிக்கப்பட்ட வாக்காளர் புகைப்படச்சீட்டு மற்றும் லோக்சபா, சட்டசபை, மேல் சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை. வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது இந்திய தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட மேற்கூறிய எந்த ஒரு அடையாள ஆவணம் வைத்திருப்பதால் மட்டுமே ஒரு வாக்காளர் தனது வாக்கைச் செலுத்திட விட முடியாது. அவருடைய பெயர் வாக்குச்சாவடிக்கு அனுப்பப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் மட்டுமே அவர் வாக்குரிமையைச் செலுத்த தகுதியுடையவர் ஆவார். இவ்வாறு அவர் கூறினார்.
Summary: Three batches of the election: Vote What are the necessary documents? Chief Electoral Officer Rajesh lakkani information