கப்பன்பார்க்: “சத்துணவு இல்லாமல், ஆண்டுதோறும் பல குழந்தைகள் உயிரிழப்பதை தடுக்கும் வகையில், கர்ப்பிணிகளுக்கும், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும் இலவச மதிய உணவு வழங்கும் திட்டம் துவக்கப்படுகிறது,” என, மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் உமாஸ்ரீ அறிவித்துள்ளார்.குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மகளிர் மற்றும் குழந்தைகள் நல துறை சார்பில், பெங்களூரு கப்பன் பார்க்கில் 'குழந்தைகள் திருவிழா - 2016' விழாவை, அமைச்சர் உமாஸ்ரீ, நேற்று துவக்கி வைத்தார்.இந்த கண்காட்சி இன்றும் தொடர்ந்து நடக்கிறது. எப்போதும் இல்லாத வகையில், சிறப்பு கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது.அமைச்சர் உமாஸ்ரீ பேசியதாவது:இன்றைய தலைமுறைக்கு நம் நாட்டுப்புற கலைகள், பாரம்பரிய விளையாட்டுகள் பற்றி தெரியாது. இதை நினைவுப்படுத்தி மீண்டும் கொண்டு வருவது நம் கடமை.இதற்காகவே, இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளின் பொது அறிவு திறனை மேம்படுத்தும் வகையில், வினாடி வினா நிகழ்ச்சி நடக்கிறது.ஆதரவற்ற, பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட, பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு சிறந்த முறையில் கல்வி அளித்து வருகிறோம். அவர்களுக்கு வழங்கிய ஊக்கத்தால், பலரும் கவிதை எழுதியுள்ளனர்.குழந்தைகளுக்கு வாழ்க்கையில் ஏற்படும் இன்ப, துன்பங்களை எப்படி கையாள்வது என்பதை அதிகாரிகள் கற்று கொடுக்க வேண்டும்.சத்துணவு இல்லாமல் ஆண்டுதோறும் பல குழந்தைகள் உயிரிழக்கின்றனர். அவர்களின் நலன் கருதி, கர்நாடக அரசு புதிய திட்டம் ஒன்றை கொண்டு வருகிறது.கர்ப்பிணிகள், பால் கொடுக்கும் பெண்களுக்கு இலவச மதிய உணவு வழங்கும் திட்டம் துவக்கப்படுகிறது. தாய் நலமாக இருந்தால் தான், பிறக்கும் குழந்தையும் ஆரோக்கியத்துடன் இருக்கும். சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நாளை (இன்று) விருது வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் பங்கேற்ற உமாஸ்ரீ, குழந்தைகளுடன் குழந்தையாக சில விளையாட்டுகளையும் விளையாடினர்.
'செல்பி' எடுத்து உற்சாகம் தோட்டக்கலை துறை சார்பில், சிறப்பு மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. குடை மிளகாய்களால் உலக உருண்டை, சிவப்பு மலர்களால் உருவாக்கப்பட்ட காதல் சின்னம், வண்ண மலர்களாலான ஈபிள் டவர், ராஜ நாகங்கள், பட்டாம் பூச்சி, வெள்ளை ரோஜா வாத்து, அன்னாசி பழம் போன்றவை பார்ப்பவர்களின் மனதை கவர்ந்தன.தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்த பலரும், மொபைல் போனில் செல்பி எடுத்து, குழந்தைகளிடம் ஒவ்வொன்றையும் அழகாக விளக்கி மகிழ்ந்தனர்.
கண்காட்சியை பார்க்கலாமா?இஸ்ரோ, ராணுவம், விமான படை, கப்பற்படை, பி.எம்.டி.சி., போக்குவரத்து, போலீஸ், என்.சி.சி., விளையாட்டு மற்றும் இளைஞர் நலம், கல்வி, வனம், கன்னட மற்றும் கலாசாரம், சுகாதாரம், செய்தி, மகளிர் மற்றும் குழந்தைகள் நலம், கால்நடை, தொழிலாளர் நலம் ஆகிய அரசு துறைகள், ஸ்டேட் பாங்க ஆப் மைசூரு, கர்நாடக பால் உற்பத்தியாளர்கள் சங்கம், மெட்ரோ ரயில், எல்.ஐ.சி., மகளிர் தன்னார்வ அமைப்புகள் சார்பில், 50க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை, அவர்களின் உரிமைகள், கடமைகள், முப்படை தளவாடங்கள், போக்குவரத்து விதிகள், விண்வெளி செயற்கைக்கோள்கள், வன பாதுகாப்பு குறித்து குழந்தைகளுக்கு விளக்கப்பட்டது.
மனதை கொள்ளை கொண்ட கலைகள்டொல்லு குனிதா, பூஜா குனிதா, வீரகாசே, தப்பட்டை, சிட்டலகி மேளா, கம்சாளே, ஜக்கலிகே, குரவராட்டம், பொம்மலாட்டம், கோலாட்டம், வேடராட்டம், லம்பானி நடனம், யக் ஷகான, குச்சுப்புடி, கதக் நடனம், பரதநாட்டியம் போன்ற கர்நாடக நாட்டுப்புற கலைகளை, மாநிலத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த பள்ளி குழந்தைகளே செய்து காண்பித்ததை, பலரும் ரசித்து மகிழ்ந்தனர்.
கர்ப்பிணி, பால் கொடுக்கும் பெண்களுக்கு சத்துணவு வழங்கும் திட்டம், மதுகிரி, ஹெச்.டி.கோட்டை, ஜமகண்டி, மான்வி தாலுகாகளில் பரிசோதனை அடிப்படையில், டிசம்பர், 15ம் தேதி துவங்கப்படும். இதற்கு, 5 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது. பின், மாநிலம் முழுவதும் விரிவுப்படுத்தப்படும். சாதம், சாம்பார், பால், முட்டை, பச்சை காய்கறிகள் என சத்துள்ள உணவு, வாரத்தின் ஆறு நாட்களுக்கு அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும்.தீபா ராஜேந்திர சோழன் இயக்குனர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை
தமிழக வால்பாறையிலிருந்து வருகிறோம். இன்றைய குழந்தைகள் கம்ப்யூட்டர், மொபைல் போனில் விளையாடுகின்றனர். இதனால் பாரம்பரிய கலைகளை மறந்து விடுகின்றனர். இந்நிகழ்ச்சி குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. ஏதோ புதிய விளையாட்டு என்று குழந்தைகள் நினைப்பர். ஆனால் பெற்றோர் தான் எடுத்து கூற வேண்டும்.கலைச்செல்வி, சுற்றுலா பயணி
வித விதமாக ஏதோ செய்து கொண்டிருந்தனர். ஆனால் என்ன செய்கின்றனர் என்று புரியவில்லை. மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. திருவிழா நடப்பது மட்டும் தெரிகிறது. இது போன்று பிரான்சிலும், கடந்த, 11ம் தேதி பெரிய அளவில் திருவிழா நடந்தது.டெப்ரமின், பிரான்ஸ் சுற்றுலா பயணி
யானை, சிறுத்தை, ஆமை பார்த்தேன். ஆமையை தொட்டும் பார்த்தேன். ஆனால், என்னை கடிக்கவில்லை. மிகவும் நன்றாக இருந்தது.சம்ருத், நான்கு வயது சிறுவன்