புதுடில்லி: ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்ததற்கு சில தலைவர்கள் ஆதரவாகவும், விமர்சித்தும் கருத்து தெரிவித்துள்ள நிலையில், ராகுல், சோனியா, கருணாநிதி உள்ளிட்டோர் மவுனம் சாதிக்கின்றனர்.
இது தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள்:
* மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் - பிரதமர் மோடி, வரலாற்று சிறப்புமிக்க துணிச்சலான முடிவை எடுத்துள்ளார். இதன் மூலம் கருப்பு பணத்திற்கு முடிவு கட்டியுள்ளார்.
* ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபர்தாஸ் - கருப்புபணத்தையும், ஊழலையும் ஒழித்து கட்ட மோடி எடுத்துள்ள துணிச்சலான முடிவு.
* மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு - பிரதமர் மோடியின் அறிவிப்பால் நேர்மையானர்களுக்கு எந்த பிரச்னையும்இருக்காது.
* தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் - அடித்தட்டு மக்களுக்கு மோடியின் இந்த அறிவிப்பு நன்மையை தரும்.
* மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் - ரூ.500, 1000 நோட்டுக்கள் இனி செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததன் மூலம் இந்திய பொருளாதாரத்தில் இருந்து இனி கறுப்பு பணம், கள்ள நோட்டுக்கள் இல்லாமல் போகும்.
* ஸ்டாலின்: கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை பாராட்டத்தக்கது. ஆனால் இதை முன்பே அறிவித்துவிட்டு செய்து இருக்க வேண்டும். இதனால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
* வைகோ: மோடியின் முடிவு, துணிச்சலானாது, பாராட்டத்தக்கது.
* பீட்டர் அல்போன்ஸ்: மத்திய அரசின் அறிவிப்பால் பாதிக்கப்படுவது மக்களும், வர்த்தகர்கள் தான் பாதிக்கப்படுவார்கள். கள்ள நோட்டு, கருப்பு பணத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
* உ.பி., முதல்வர் அகிலேஷ்: ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்படுவதால், ஏழை எளிய, விவசாய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமம் மற்றும் மாவட்டங்களில் சிறப்பு வங்கி கிளைகள் மற்றும் கவுன்டர்கள் ஏற்படுத்த வேண்டும்.
* சீதாராம் யெச்சூரி: இந்த திட்டத்தால், வெளிநாட்டில் கருப்பு பணம், சொத்து, தங்கம் உள்ளிட்டவைகளில் முதலீடு செய்தவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள். அரசின் 2.5 வருட தோல்வியில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* மம்தா: இந்த முடிவை மாற்ற வேண்டும். ரூ.100 கிடைக்காததால், மக்கள், சிறு தொழிலாளர்கள், மற்ற தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.
* ஒடிசா முதல்வர்: நவீன் பட்நாயக்: மோடியின் தைரியமான நடவடிக்கையை வரவேற்கிறேன். கருப்பு பணம், கள்ளப்பணத்தை ஒழிக்க தைரியமான நடவடிக்கை
* இல.கணேசன்: கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளது.
மவுனமான தலைவர்கள்:
மத்திய அரசு மற்றும் மோடியின் பல நடவடிக்கைகள் குறித்து இதுவரை விமர்சித்து பலர்கருத்துக்களை தெரிவித்துள்ள நிலையில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, அவரது மகள் கனிமொழி, பா.ம.க., தலைவர் ராமதாஸ், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத்தலைவர் ராகுல், தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர், சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங், பகுஜன் சமாஜ்வாதி தலைவர் மாயாவதி, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா உள்ளிட்டோர் எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக உள்ளனர்.