புதுடில்லி : ஜம்மு- காஷ்மீரின் முன்னாள் கவர்னர் எஸ்.கே.சின்ஹா(92), உடல் நலக்குறைவால் காலமானார்.
முன்னாள் கவர்னர்:
ஜம்மு- காஷ்மீர் மாநில முன்னாள் கவர்னர் எஸ்.கே.சின்ஹா தொடை மற்றும் விலா எலும்பு முறிவு காரணமாக டில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கடந்த 1ம் தேதி(நவ.,1) அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று(நவ.,17) காலமானார். இவர், நேபாளத்துக்கான இந்தியத் தூதராகவும், அசாம் மாநில கவர்னராகவும் பணியாற்றியிருந்தார். இவரது மகன் ஒய்.கே.சின்ஹா இலங்கைக்கான இந்தியத் தூதராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி இரங்கல் :
சின்ஹாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: சின்ஹா மறைவுக்கு ஆழ்ந்த வருத்தம். சில நாட்களுக்கு முன் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாட்டுக்கு அவர் ஆற்றிய சேவை எப்போதும் நினைவில் நிற்கும். இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
English Summary:
Eskecinha former governor of Jammu and Kashmir (92), died of an illness.