திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலின் பெயர் சபரிமலை ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோயில் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லட்சகணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக, கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மாதங்களில் ஏராளமானோர் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்ப சுவாமியை தரிசினம் செய்து வருகின்றனர்.
பெயர் மாற்றம்:
சபரிமலை கோயிலை திருவாங்கூர் தேவஸ்வம் போர்ட் நிர்வகித்து வருகிறது. பெயர் மாற்றம் குறித்து தேவஸ்வம் போர்ட் தரப்பில், கூறப்பட்டதாவது.
திருவாங்கூர் தேவஸ்வம் போர்ட் நிர்வாகத்தின் கீழ் 1,248 கோயில் உள்ளது. அதில் பல கோயில்களின் பெயர்களில் தர்மசாஸ்தா கோயில் என இடம்பெற்றுள்ளது. அதன் காரணமாகவே சபரிமலை ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோயில் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கோயில் தொடர்பான அனைத்து ஆவணங்களிலும் புதிய பெயரே பயன்படுத்தப்படும்.
கடந்த அக்.,5 தேதி நடந்த தேவஸ்வம் போர்ட்டின் நிர்வாக கூட்டத்தில் இந்த பெயர் மாற்ற முடிவு எடுக்கப்பட்டது. இவ்வாறு போர்ட் தரப்பினர் தெரிவித்தனர்.
English Summary:
The famous Sabarimala Ayyappa temple in Kerala's Sabarimala Sree Ayyappa Swamy Temple, as the name has been changed.