பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர், இன்று துவங்கும் நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பான சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுமா என்ற எதிர்பார்ப்பு, தமிழக மக்களிடம் எழுந்துள்ளது; இது தொடர்பான வழக்கின் விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெறுகிறது.
தமிழகத்தில் நடத்தப்படும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, 2006 முதல்,சுப்ரீம் கோர்ட் வழக்கு களில் சிக்கி, பல்வேறு தடைகளை சந்தித்து வருகிறது. இதனால், இரண்டு ஆண்டுகளாக, பொங்கலின்போது, ஜல்லிக்கட்டு நடத்தப்பட வில்லை. இதற்கு, தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மத்தியில், கடும் எதிர்ப்பு கிளம்பியது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வந்த நிலை யில், இந்தாண்டு ஜன., 8ல், காளை மாடுகளை, காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கி,மத்திய அரசு உத்தரவிட்டது.அதை எதிர்த்து, விலங்குகள் நல ஆர்வலர்கள், சுப்ரீம் கோர்ட்டை அணுகியதால், கடைசி நேரத்தில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டது.
இது தொடர்பாக, தமிழக அரசு தொடர்ந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில், 9ல், விசாரணைக்கு வந்தது. இதன் மீதான விசாரணை, இன்று மீண்டும் துவங்குகிறது. இந்நிலையில், பார்லி., குளிர்கால கூட்டத்தொடர், இன்று துவங்கி, டிச., 16 வரை நடைபெறுகிறது. இதில்,சட்ட திருத்தம் கொண்டு வந்தால், வரும், பொங்கலுக்கு,ஜல்லிக் கட்டு நடத்த வழி பிறக்கும்.
இது குறித்து, தமிழக ஜல்லிக்கட்டு பேரவை தலைவர், ராஜசேகரன் கூறியதாவது:
காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில இருந்து, காளைகளை, மத்திய அரசு நீக்க வேண்டும். 1960ம் ஆண்டு, பிராணிகள் வதை தடுப்புச் சட்டத் தில், இரு திருத்தங்களை, மத்திய அரசு செய்ய வேண்டும். அது, இக்கூட்டத் தொடரில் நடந்தால், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நோட்டு வாபஸ் விவகாரம்:
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில், 5,00, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என,அறிவித்த விவகாரம் உட்பட பல பிரச்னைகளை எழுப்ப, காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
டில்லியில், காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம், கட்சி யின் தலை வர் சோனியா தலைமையில், நடந்தது. இதில், முன் னாள் பிரதமர் மன்மோகன் சிங்,துணை தலைவர் ராகுல், உட்பட பலர் பங்கேற்றனர்.
இக் கூட்டத்தில், மத்திய அரசு, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என, அறிவித்து உள்ள தால், ஏற்பட்டுள்ள நிலைமை, பாக்., ஆக்கிர மிப்பு காஷ்மீர் பகுதியில், இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல், பாகிஸ்தான் மீதான அரசின் கொள்கை, உட்பட பல விஷயங்கள் பற்றி ஆலோ சிக்கப்பட்டது. இந்தப் பிரச்னைகளை பார்லிமென்ட் டில் எழுப்ப முடிவு செய்யப்பட்டது.
அத்துடன், முன்னாள் ராணுவத்தினருக்கான, ஒரு பதவி; ஒரே ஓய்வூதியம், விவசாயிகள் பிரச்னை, ரயில்வே மற்றும் மத்திய பட்ஜெட்களை ஒன்றாக இணைத்தது, ஆகியவை பற்றியும், பார்லிமென்டில் எழுப்ப முடிவு செய்யப்பட்டது.
சரத் யாதவ் கோரிக்கை:
ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ், கூறிய தாவது: மத்திய அரசின் உத்தரவால், கறுப்பு பண புழக்கம் கட்டுப்படுத்தப்படும் என்றாலும், சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் ஏழைகள் பரிதவிக்கின்றனர். அதனால், ராஜ்யசபாவில், இன்று நடத்த திட்ட மிடப் பட்டுள்ள அனைத்து அலுவல்களையும் ஒத்தி வைத்து விட்டு, இந்த விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும். இது தொடர்பாக நோட்டீஸ் கொடுத்துள்ளேன். இவ்வாறு சரத் யாதவ் கூறினார்.
சசிகலா புஷ்பாவின் முதல் கேள்வி:
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரின் போது, தான் தாக்கப்பட்டதாக கூறி, கண்ணீரும் கம்பலையுமாக சசிகலா புஷ்பா பேசிய விவ காரம், ராஜ்யசபாவை கலங்கடித்தது. இன்று தொடங்க உள்ள குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளிலும், சசிகலா புஷ்பா பரபரப்பை கிளப்பியுள்ளார்.
இன்று, கேள்வி நேரத்தில், முதல் கேள்வியாக இவரது கேள்வி, இடம்பெற்றுள்ளது. பெண்கள் பாதுகாப்பு என்ற தலைப்பின் கீழ் கேள்வி எழுப்பி உள்ளார். சசிகலா புஷ்பா என்ன பேசுவார்
பிப்., 1ல் பட்ஜெட் தாக்கல்:
வரும் ஆண்டில், பிப்., 1ல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனத் தகவல்கள் கூறுகின்றன.
என்பது மர்மமாக உள்ளது. இதை எவ்வாறு சமாளிப்பது என்ற பீதியால், அ.தி.மு.க., - எம்.பி.,க் களிடம், பரபரப்பு காணப்படுகிறது.
இதுகுறித்து, பார்லிமென்ட் வட்டாரங்கள் கூறியதாவது:வரும் ஆண்டு முதல், பார்லியில், பிப்., 1ல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீடுகளை இறுதி செய்வதற்கான, அமைச்சகங்கள் இடையிலான கூட்டம் நிறைவு பெற்றுள்ளது. எனவே, பட் ஜெட்டை, பிப்., 1ல் தாக்கல் செய்வதில் சிரமம் இருக்காது. இவ்வாறு பார்லி., வட்டாரங்கள் கூறின.