புதுடில்லி:டில்லியில் நேற்று நடந்த, காங்., செயற்குழு கூட்டத்தில், அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல், தலைமை பொறுப்பை ஏற்க வேண்டுமென, ஒருமனதாக வலியுறுத்தப்பட்டது. கூட்டத்துக்கு தலைமை வகித்த ராகுல், தலைவர் பதவியை ஏற்க மறுத்தார். இதைத்தொடர்ந்து, மேலும் ஓர் ஆண்டு, சோனியாவே தலைமைப் பதவியில் நீடிக்க, செயற்குழு ஒப்புதல் அளித்தது.
காங்., கட்சித் தலைவராக, 1998 முதல், சோனியா, 69, செயல்பட்டு வருகிறார். கட்சித் தலைமை பொறுப்பை, நான்காவது முறையாக அவர் வகித்து வருகிறார். அவரது மகன் ராகுல், 46, ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில், 2013ல் நடந்த கட்சி மாநாட்டின் போது, துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது முதல், அவரை, கட்சியின் தலைவராக்க வேண்டுமென, மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தலைவர்கள் விருப்பம்:
அடுத்தாண்டு, உ.பி., பஞ்சாப், கோவா உள்ளிட்ட, ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல் நடக்கஉள்ளது. இந்த தேர்தல்களை, ராகுலின் தலைமையில், காங்., எதிர்கொள்ள வேண்டுமென, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் விரும்புகின்றனர்.
இந்நிலையில், காங்.,கின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அமைப்பான, காங்., செயற்குழு, டில்லி யில் நேற்று, ராகுல் தலைமையில் கூடியது. உடல் நிலை காரணமாக, சோனியா, இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.நேற்றைய கூட்டத்தின் துவக்கத்தில், காங்., மூத்த தலைவர், ஏ.கே.அந்தோணி, கட்சியின் தலைமை பொறுப்பை, ராகுல் ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையைவலியுறுத்தி பேசினார். அவர் கருத்துக்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும், ஒருமனதாக ஆதரவு தெரிவித்தனர்.
முறைப்படி விவாதம்:
இருப்பினும், கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க, ராகுல் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அடுத்த ஓர் ஆண்டுக்கு, காங்., தலைவராக, சோனியாவே நீடிக்க, செயற்குழு ஒப்புதல் அளித்தது. இதற்கிடையே, அடுத்த இரு வாரங்களில், காங்., செயற்குழு கூட்டத்தை மீண்டும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது, கட்சித் தலைமை பொறுப்பை, ராகுல் ஏற்பது குறித்து, முறைப்படி விவாதிக்கப்படும் என, தகவல்கள் கூறுகின்றன.
மோடி அரசு மீது பாய்ச்சல்:
செயற்குழு கூட்டத்தில் பேசிய ராகுல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அரசை கடுமையாக தாக்கிப் பேசினார்.
ராகுல் பேசியதாவது:மோடி தலைமையிலானஆட்சியில், ஜனநாயகம் மிக மோசமான கால கட்டத்தில் உள்ளது. மத்திய அரசு, அதிகார வெறியுடன் செயல்படுகிறது; எதிர்த்து பேசுவோரை, மிரட்டி பணிய வைக்க முயற்சிக்கிறது. தேசிய பாதுகாப்பு என்ற பெயரில், மக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். இந்த ஆட்சியில், 'டிவி' சேனல்கள் தண்டிக்கப்படுகின்றன; ஒளிபரப்பை
நிறுத்தும்படி மிரட்டப்படுகின்றன. அரசின் தவறுகளை சுட்டிக் காட்டும், எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்படுகின்றனர். அடிப்படை சுதந்திரத்தை முடக்க வேண்டுமென்ற, மத்திய அரசின் அனைத்து முயற்சிகளும், காங்., கட்சியை மேலும் வலுப்படுத்தும். எதிர்க் கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு, அரசிடம் எந்த பதிலும் இல்லை. அதனால், கேள்வி கேட்பதே, இந்த அரசுக்கு பிடிப்பதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
மூத்த தலைவர்கள் பங்கேற்பு:
காங்., செயற்குழு கூட்டம், முதல் முறையாக, ராகுல் தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், மூத்த தலைவர்கள் மன்மோகன் சிங், சிதம்பரம், குலாம் நபி ஆசாத், ஜனார்த்தன் திவேதி, அஹமது படேல், அம்பிகா சோனி, ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். பார்லிமென்ட் குளிர்காலக் கூட்டத் தொடர், 16ல் துவங்குகிறது. இந்த சூழ்நிலையில், காங்., செயற்குழு கூட்டம் நடந்துள்ளது, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.