"தூய்மை இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற மத்திய அரசின் திட்டங்கள், இந்தியாவைப் பொருளாதார வல்லரசாக மாற்றும்' என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
சண்டீகரில் ஞாயிற்றுக்கிழமை விவசாயத் தொழில்நுட்பக் கண்காட்சியை தொடங்கி வைத்து, அவர் பேசியதாவது:
"இந்தியாவில் தயாரிப்போம்', "தூய்மை இந்தியா', "பொலிவுறு இந்தியா', 'டிஜிட்டல் இந்தியா' போன்ற புத்தாக்கத் திட்டங்களை நமது அரசு தொடங்கியுள்ளது. இத்திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால், உலக அளவில் மிகப் பெரும் பொருளாதார வல்லரசாக இந்தியா உருவெடுக்கும்.
நவீன தொழில்நுட்பங்கள் மூலம் பயிர் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். நம்மிடமுள்ள அனைத்து வளங்களையும் திறம்படப் பயன்படுத்துவதுடன், விவசாய உற்பத்தியை அதிகபட்ச அளவுக்கு உயர்த்த வேண்டும்.
மிகச் சிறப்பான நீர்ப்பாசன தொழில்நுட்பங்கள் மூலம் விவசாய உற்பத்தியில் இஸ்ரேல் சாதனை படைத்துள்ளது. அவர்களிடம் நாம் பாடம் கற்க வேண்டும்.
கடந்த 15 ஆண்டுகளாக, இந்தியா நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைந்து வருகிறது.
உலக அளவில் பொருளாதார மந்த நிலை நிலவும் போதும், 7.6 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை எட்டியுள்ளோம்.
நம் நாடு சுதந்திரம் அடைந்த போது, பயிர் உற்பத்தி 50 மில்லியன் டன்களாக இருந்தது. இப்போது, அது 270 மில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது என்றார் பிரணாப்.
இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக பங்கேற்ற இஸ்ரேல் அதிபர் ரியூவென் ரிவ்லின் பேசியதாவது:
விவசாயத் துறையில் இந்தியா-இஸ்ரேல் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தினால், இரு தரப்பும் இணைந்து பெரிய சாதனையை படைக்க முடியும்.
நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிலேயே மிகுந்த கவனம் செலுத்தி வந்த நாங்கள், உணவுப் பாதுகாப்பு குறித்து கற்றுக் கொண்டது இந்தியாவிடம் இருந்துதான் என்றார் அவர்.
இந்நிகழ்ச்சியில் மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதாமோகன் சிங், பஞ்சாப் ஆளுநர் வி.பி.சிங் பத்னோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

English Summary : The purity of the economic power of the country, such as India projects: Pranab Mukherjee."Purity of India, the Central Government's projects such as digital India, for India to convert economic power," said the President Pranab Mukherjee.