அமெரிக்க அதிபராகத் தேர்வுபெற்றுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் உள்ளிட்ட நகரங்களில் மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசித்து வரும் 30 லட்சம் பேரை நாடு கடத்துவது உள்ளிட்ட டொனால்ட் ட்ரம்பின் பல்வேறு கருத்துக்களுக்கு எதிராக நாடு முழுவதும் சர்ச்சைகள் நிலவி வருகின்றன.
இந்நிலையில் அவருக்கு எதிராக பல்வேறு நகரங்களில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் வகுப்புக்களைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர். கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏன்ஜலிஸ் நகர கல்லூரி ஒன்றில் வகுப்புக்கள் தொடங்கிய பின், மாணவர்கள் அனைவரும் கல்லூரியை விட்டு வெளியேறினர்.
பின்னர் நெடுஞ்சாலையில் பேரணியாகச் சென்ற மாணவர்கள் எந்த வித ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாகப் போராட்டத்தில் பங்கேற்றனர். ட்ரம்புக்கு எதிரான போராட்டங்கள் 2 வாரங்களாக தொடரும் நிலையில், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஏற்கனவே இதுபோன்ற போராட்டங்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.