ராய்ப்பூர்: ச
த்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, டில்லி பல்கலை பேராசிரியை உட்பட, 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில், முதல்வர் ரமண் சிங் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது; இங்குள்ள பஸ்தார் மாவட்டத்தில், பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஷாம்நாத் பஹேல், சமீபத்தில் கொல்லப்பட்டார். மாவோயிஸ்ட் பிரச்னை அதிகம் உள்ள இந்த பகுதியில், அந்த அமைப்புக்கு எதிராக போராடி வந்தார் பஹேல்.அவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், டில்லி பல்கலை சமூகவியல் துறை பேராசிரியை நந்தினி சுந்தர், டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை பேராசிரியை அர்ச்சனா பிரசாத் உட்பட, 10 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து, போலீசார் கூறியதாவது: பஹேலுக்கு மிரட்டல் விடுத்ததாக, சிலர் மீது, அவரது மனைவி புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.