யூயார்க்: அமெரிக்காவில், குடியரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அதிபர் தேர்தலின்போது, தன்னை கடுமையாக விமர்சித்தவருமான மிட் ரோம்னிக்கு, வெளியுறவு அமைச்சர் பதவி வழங்க, டிரம்ப் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப், 70, வெற்றி பெற்றார். 2017 ஜனவரியில், அவர் பதவி ஏற்க உள்ளார்; புதிய அமைச்சர்களை தேர்வு செய்யும் பணியில், அவர் ஈடுபட்டு உள்ளார்.
இந்நிலையில், தான் சார்ந்துள்ள குடியரசு கட்சியின், மிதவாத தலைவர்களில் ஒருவரான மிட் ரோம்னியை, டிரம்ப் சந்தித்து பேசினார்.
நியூஜெர்சியில் உள்ள டிரம்ப்க்கு சொந்தமான, 'கோல்ப்' விளையாட்டு மைதானத்தில், இந்த சந்திப்பு நடந்தது. பின்னர் ரோம்னி கூறுகையில், ''பல்வேறு நாடுகளுடனான அமெரிக்காவின் உறவு குறித்து, இருவரும் பேசினோம்,'' என்றார்.
எனினும், புதிய வெளியுறவு அமைச்சராக, ரோம்னியை நியமனம் செய்ய, டிரம்ப் விரும்புவதாக கூறப்படுகிறது; இதுதொடர்பாக, அவருடன், டிரம்ப் பேசியதாக தெரிகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, டிரம்ப்பை அதிபர் வேட்பாளராக அறிவிக்க, ரோம்னி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
'பிரைமரி' என அழைக்கப்படும், கட்சியின் உத்தேச வேட்பாளர் தேர்தலில், டிரம்புடன், ரோம்னியும் போட்டியிட்டார். அப்போது, டிரம்ப்பை, 'ஏமாற்று பேர்வழி, நகைச்சுவை நடிகர்' என, ரோம்னி வசைபாடியது குறிப்பிடத்தக்கது.
English Summary:
The United States, the Republican Party's senior leader, presidential election, itself strongly speaking about Mitt Romney, the Foreign Minister to deliver, Trump plans reported.