புதுடில்லி:வங்கி கடன் பாக்கி வைத்து, லண்டனுக்கு தப்பி சென்றுள்ள, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா உட்பட, 57 பேரை ஒப்படைக்கும்படி, பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவிடம், பிரதமர் மோடி கோரிக்கை வைத்து, பட்டியலை அளித்துள்ளார்.
பிரிட்டன் பிரதமர் தெரேசா மே, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம், தெரேசா மே மற்றும் பிரதமர் மோடி இடையே, இருதரப்பு உறவுகள் குறித்து நீண்ட பேச்சு நடந்தது.இந்த பேச்சின் போது, 'இந்தியாவில், பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும், 57 பேர், பிரிட்டனில் தங்கியுள்ளனர்; அவர்களை, இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டது.
அதே போல், இந்தியாவில் உள்ள, 17 பேரை வெளியேற்றும்படி, பிரிட்டன் தரப்பில் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது.இருதரப்பு சட்ட உதவி ஒப்பந் தத்தின் அடிப்படையில், இவர்களை வெளியேற்ற, இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன.
முன்னதாக, இரு நாட்டு அதிகாரிகள் இடையேயான பேச்சின் போது, இந்த பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்திய தரப்பில் அளிக்கப்பட்டுள்ள பட்டியலில், பல்வேறு வங்கிகளுக்கு, 9,000 கோடிரூபாய் கடன் பாக்கி வைத்துள்ள, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா; வி.வி.ஐ.பி.,க்களுக்கு ஹெலிகாப்டர் வாங்குவதில், 3,600 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட, பிரிட்டன் தரகர் கிறிஸ்டியான் மைக்கேல் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
மோசடி வழக்குகள் மற்றும் கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு, மற்ற நாடுகளால் தேடப்படுபவர்களை வெளியேற்று வது என, இந்தியாவும், பிரிட்டனும் பரஸ்பரம் ஒப்புக் கொண்டு உள்ளன.
பயங்கரவாதம், விசா, குடியேற்றுமை மோசடிகள் உள்ளிட்டவற்றில், பரஸ்பரம் ஒத்துழைப்பது என்றும், பிரதமர் மோடி - தெரசா மே இடையேயான பேச்சில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.