புதுடில்லி: மத்திய அரசு நடவடிக்கையால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கறுப்பு பணம் பதுக்கியுள்ளவர்கள் நிம்மதியாக உள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் இன்று துவங்கியது. ராஜ்யசபா துவங்கியதும் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ரூபாய் நோட்டு வாபஸ் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனை ஏற்றுக்கொண்ட அவைத்தலைவர், கேள்வி நேரத்தை மாலை 6 மணிக்கு மேல் ஒத்திவைத்தார். தொடர்ந்து விவாதம் நடந்தது.
விவாதத்தை துவக்கிவைத்து காங்கிரஸ் கட்சியின் ஆனந்த் சர்மா பேசியதாவது:
சந்தையில் புழக்கத்தில் உள்ள 86 சதவீதம் ரூபாய் நோட்டுக்கள் எல்லாம் ரூ.500, 1000 நோட்டுக்கள் தான். இந்த நோட்டுக்கள் ஒரே அறிவிப்பில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது எல்லாம் கறுப்பு பணமா? அரசால் விவசாயிகள் பெரிதும் துன்பத்தில் உள்ளனர். கறுப்பு பணம் பதுக்கியவர்கள் நிம்மதியாக உள்ளனர்.
விவசாயிகள் அவதி:
விவசாயிகளிடம் கிரடிட் கார்டு உள்ளதா. எந்த பொருளாதாரம் பணமில்லாமல் வேலை செய்ய அனுமதி செய்கிறது. விதைகள், உரம் கூட வாங்க விவசாயிகளால் முடியவில்லை. இதற்கு அவர்களால் பணம் கட்ட முடியவில்லை. பணம் எடுக்க வரிசையில் நிற்க நேரமில்லை. நமக்கு உணவளிக்கும் விவசாயிகள் கறுப்பு பணத்தையா கொண்டு வருகிறார்கள்?
இந்தியாவிற்கு அவப்பெயர்:
மத்திய அரசின் இந்த நடவடிக்கை, இந்திய பொருளாதாரம் கறுப்பு பணத்தால் இயங்குகிறது என்ற செய்தியை உலகிற்கு தெரிவித்துள்ளது. நாட்டில் நிதி நெருக்கடியை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. பணத்திற்கு கட்டுப்பாடு விதிக்க அரசுக்கு உரிமை கிடையாது. கறுப்பு பணம் சூட்கேசில் தூங்காது. சொத்துக்கள் தங்க நகையில் முதலீடு செய்யப்பட்டிருக்கும். அல்லது வெளிநாடு சென்றிருக்கும். கறுப்பு பணம் பதுக்கியவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படவில்லை. பிரதமர் அவர்களே, உங்களை கொல்ல முயற்சிப்பவர்கள் யார் என சொல்ல வேண்டும்.
மன்னிப்பு கேட்க வேண்டும்:
ஒருவரின் தேசப்பற்று என்ன என்பதற்கான வரையறையை நிர்ணயிக்கும் உரிமை அரசுக்கு உள்ளதா என்ற கேள்வியை எழுப்பும் சூழ்நிலை உருவாகியுள்ளது. சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் வைத்துள்ளவர்கள் பட்டியல் அரசிடம் உள்ளது. இதனை வெளியிட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். வரிசையில் நிற்கும் பொதுமக்களை அவமானப்படுத்தும் வகையில் பிரதமர் பேசியுள்ளார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். எடுக்கப்பட்ட பணத்திற்கு பதிலாக புதிய பணத்தை ஏன் வழங்கவில்லை. யாருடைய கருத்தையும் கேட்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டு, அதனை பின்பற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. நாம் நாகரீகமான நாட்டை சேர்ந்தவர்கள். சட்ட விதிகள் அடிப்படையில் செயல்படுகிறோம். ஆனால் மத்திய அரசு குடிமகன்களை குற்றவாளிகளாக மாற்றியுள்ளது என்றார்.