புதுடில்லி: சமீபத்திய பண பரிமாற்றத்தால் கறுப்பை , வெள்ளயைாக மாற்ற பலர் அவரவருக்கு தெரிந்து வழியில் களம் இறங்கியுள்ளனர். பழைய 500, ஆயிரம் நோட்டுகளை மாற்றி தருபவர்களுக்கு கமிஷன் பேரம் பேசப்படுவதாகவும் தகவல் பரவி வருகிறது.இது போன்ற சட்ட விரோத நடவடிக்கையில் இறங்குவோர் மீது நடவடிக்கை எடுக்க மத்திய நிதி அமைச்சகம், சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து அமலாக்க மற்றும் வருவாய் துறையினர் தங்களின் பணியை துவக்கியுள்ளனர்.
கண்காணிக்க உயர் குழுக்கள்:
இதன் முதல் கட்டமாக தங்கம், வைரம் வாங்கி குவித்தவர்கள், வியாபாரிகள் ஆகியாரை லென்ஸ் வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளது. மேலும் வங்கியில் டிபாசிட், வெளி நாட்டு பண பரிமாற்றம் ஆகியன குறித்து தகவல்கள் சேகரித்தும், கண்காணிக்கவும் சில உயர் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இதனால் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பலர் சிக்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.