ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் பாக்., ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ஜவான் ஒருவர் பலியானார்; 3 வீரர்கள் காயமடைந்தனர்.
எல்லையில் பதற்றம் :
யூரி ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்திய எல்லைப்பகுதிகள் முழுவதிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும், இந்தியா நடத்திய ‛சர்ஜிகல் ஸ்ட்ரைக்' தாக்குதலில் பாக்., பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதைய
டுத்து எல்லையில் பதட்டம் நிலவி வருகிறது.
பி.எஸ்.எப்., ஜவான் :
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி செக்டரில் பாக்., ராணுவம் இன்று அத்துமீறி தாக்கியதில் இந்திய எல்லைப் பாதுகாப்புபடை தலைமைக் காவலர் ராய்சிங் பலியானார். மேலும் 3 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கடந்த 24 மணி நேரத்தில் இந்திய எல்லையில் பாக்., ராணுவம் 3 முறை அத்துமீறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
English summary:
Jammu and Kashmir Rajouri Bach., One army jawan was killed in an attack in India; 3 soldiers were injured.