புதுடில்லி : ஏ.டி.எம்.களில் பணத்தை கையாளுவதற்கு உள்ள சாதனங்களில், ரூ.100, ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை கையாளுவதற்கான தொழில்நுட்பமே பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஏ.டி.எம்., சீரடைய இன்னும் ஒரு வாரம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வாரமாகும் :
நாடு முழுவதும் ஏ.டி.எம்.கள் 2 நாட்களுக்கு பிறகு நேற்று திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன. ஆனால், பெரும்பாலான ஏ.டி.எம்.கள் திறக்கப்படவில்லை. திறந்து இருந்த ஏ.டி.எம்.களில் கூட்டம் அலைமோதியதால், சீக்கிரமே பணம் காலியானது. இந்த நிலைமை இன்னும் ஒரு வாரத்துக்கு நீடிக்கும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால், ஏ.டி.எம்.களில் பணத்தை கையாளுவதற்கு உள்ள கேசட் என்ற சாதனங்களில், ரூ.100, ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை கையாளுவதற்கான தொழில்நுட்பமே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தற்போது ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது என அறிவித்து இருப்பதால், ரூ.50 மற்றும் புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுகளை கையாளுவதற்கான தொழில்நுட்ப மாற்றங்களை செய்ய வேண்டி உள்ளது.
நேரத்தை வீணடிக்க வேண்டாம் :
ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் பணியை செய்யும் ஒப்பந்த நிறுவனங்கள், இதை ஒரே நாளில் செய்துவிட முடியாது. அதற்கு குறைந்தபட்சம் 7 முதல் 10 நாட்கள் ஆகும் என தெரிவித்துள்ளன. மேலும், ரிசர்வ் வங்கியிடம் இருந்து புதிய நோட்டுகளை வங்கிகள் பெற்றுத்தந்த பிறகுதான், ஏ.டி.எம்.களில் பணத்தை நிரப்ப முடியும். எனவே, 'கையில் ரொக்கம் தீர்ந்து விட்டால், அவசர செலவுகளுக்கு ஏ.டி.எம்.களுக்கு செல்லாமல், வங்கிகளுக்கு செல்வதே நல்லது. மின்னணு பண பரிவர்த்தனை முறையையும் பயன்படுத்தலாம். அதை விடுத்து, ஏ.டி.எம்.களில் நீண்ட நேரம் நின்று, பணம் கிடைக்காமல் திரும்ப வேண்டாம்' என்று பணம் நிரப்பும் ஒப்பந்த நிறுவனங்கள் கூறுகின்றன.