சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க பொதுக் குழுக்கூட்டத்தில் எங்களை நீக்கியது தன்னிச்சையாக எடுக்கப்பட்டுள்ள முடிவு. அதை சட்டப்படி நீதிமன்றத்தில் முறையிட்டு தீர்வு காண்போம் என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகர் சரத்குமார் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
தென்னிந்திய நடிகர் சங்க பொதுக் குழு கூட்டம் நடந்துள்ளது என கூறியிருப்பது விதிகளின்படி சரியானதா என்ற கேள்வி ஒரு புறம் இருக்க, அந்தக் கூட்டத்தின் மூலம் எங்களை நிரந்தரமாக நீக்கியுள்ளதாக கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல.
ஏற்கெனவே, தாற்காலிக நீக்கம் செய்துள்ளதை எதிர்த்து நாங்கள் நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நிரந்தர நீக்கம் எனக் கூறுவது சட்டத்திற்கு உள்பட்டதல்ல, அதற்கு புறம்பானதாகும். இந்த நிலையில், என்னைத் தொடர்புகொண்டு தங்களது உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொண்ட ரசிகர்களுக்கும், இயக்கத்தின் சகோதர சகோதரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே, தென்னிந்திய நடிகர் சங்கப் பொது குழுக்கூட்டத்தில் எடுத்துள்ள தன்னிச்சையான முடிவை சட்டத்தின் மூலம் நீதிமன்றத்தில் முறையிட்டு தீர்வு காண்போம். ரசிகர்கர்களும், தொண்டர்களும் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்," என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
English summary:
Sarathkumar says that he would challenge the dismissal from Nadigar Sangam in the court.