தேனி: பட்டுப்புழுவில்
'பிளாக்செரி' என்ற வைரஸ் நோய் தாக்குதலால் புழுக்கள் இறந்து, பட்டு கூடு உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் தேனி விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.தேனி மாவட்டத்தில் கொடுவிலார்பட்டி, உப்புக்கோட்டை, பெருமாள்பட்டி, கடமலைக்குண்டு பகுதிகளில் 500 விவசாயிகள் பட்டு புழு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். 1,500 ஏக்கரில் மல்பரி செடி சாகுபடி செய்கின்றனர். பட்டு புழுக்கள் மூலம் பட்டுக்கூடு வளர்த்து விற்கின்றனர்.தற்போது நவீன முறை புழு வளர்ப்பில் 10 நாட்கள் குறையும் என்பதால், இளம் புழு வளர்ப்பு மையங்களில் இருந்து புழுக்கள் வாங்கி வளர்க்கின்றனர். 100 முட்டை தொகுதிக்கு 5 ஆயிரம் புழுக்கள் கிடைக்கும். இதற்கான விலை மற்றும் போக்குவரத்து செலவுடன் 1,750 ரூபாய் ஆகும். இந்த புழுக்களுக்கு 'மல்பெரி' இலை உணவு அளித்து, 18 நாட்கள் வளர்த்தால் பட்டுக்கூடு உருவாகும். ஒரு தொகுதி வளர்த்தால் 80 முதல் 90 கிலோ பட்டுக்கூடு பெறலாம். கிலோ ரூ.320 முதல் ரூ. 400 வரை விலை போகிறது.
நோய் தாக்கம் : மாவட்டத்தில் ஆறு மாதங்களாக பட்டு புழுவில் 'பிளாக்செரி' நோய் பாதித்து அதிகம் இறக்கிறது. 100 முட்டை தொகுதியில் நோய் பாதிப்பால் 30 கிலோ கூடு மட்டுமே பெற முடிகிறது. உற்பத்தி குறைந்ததால், விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைகின்றனர்.
நோய் காரணம் : விவசாயிகளுக்கு மத்திய பட்டுவாரியம் முன்னர் தரமான முட்டை உற்பத்தி செய்து நோய் எதிர்ப்பு திறனுள்ள புழுக்களை வழங்கியது. இவற்றை மைசூரு, பாலக்காட்டில் பெற்றனர். தற்போது தமிழக அரசு பட்டு வளர்ச்சி துறையில் கிருஷ்ணகிரி மையம் மூலம் முட்டை வாங்கி இளம் புழுக்கள் வளர்க்கின்றனர். இங்கு உருவாகும் புழுக்களுக்கு நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருப்பதால் வாங்கிய ஒரு வாரத்தில் இறக்கிறது. இதனால் விவசாயிகள் புலம்புகின்றனர்.
உப்புக்கோட்டை விவசாயி திருப்பிரகாஷ் கூறுகையில்,“ 12 ஆண்டாக பட்டு கூடு வளர்க்கிறேன். தற்போது பட்டுபுழு, நோய் பாதித்து அதிகம் இறக்கின்றன. பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. மத்திய அரசு வழங்கிய பட்டு புழுவில் சேதம் இருக்காது. கிருஷ்ணகிரி மையத்தில் நோய் எதிர்ப்பு திறன் இல்லாத புழுக்கள் வழங்குவதால் பாதிப்பு அதிகம் உள்ளது. நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,”என்றார்.
அருள்மொழி(உதவி இயக்குனர், பட்டு வளர்ச்சி துறை, தேனி) கூறுகையில்,“புழுவில் 'பிளாக்செரி' என்பது வைரஸ் நோய். ஒவ்வொரு புழு வளர்ப்பு மையத்திலும் 5 சதவீத பிளிச்சிங் பவுடர் சொலுசன், சானிடெக் அல்லது குளோரின் டைஆக்சைடு மருந்து இருமுறை தெளிக்க வலியுறுத்தி வருகிறோம். தரமான இலை, சுகாதாரமான புழு வளர்ப்பு இருந்தால், நோய் பாதிப்பு வராது,”என்றார்.