தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆண்களை மோசமாக திட்டியதாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து விளக்கம் அளிக்க நடிகை ஊர்வசிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குடும்ப பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் நிகழ்ச்சி ஒன்றை பிரபல மலையாள தொலைக்காட்சியில் நடிகை ஊர்வசி நடத்தி வருகிறார். இதில் பங்கேற்கும் ஆண்களை மிகவும் மோசமான வார்த்தைகளில் நடிகை ஊர்வசி திட்டுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இந்நிலையில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒருவர் மனித உரிமை ஆணையத்தில் அளித்துள்ள புகாரில் தான் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது ஊர்வசி தன்னை மிகவும் மோசமான வார்த்தைகளில் திட்டியதாக புகார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நடிகை ஊர்வசி மற்றும் அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தனியார் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் உள்ளிட்டோருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
English Summary:
Private television show men terribly offended controversy has arisen over the interpretation of the Human Rights Commission issued a notice to actress Urvashi.