பீஜிங் : இந்திய அரசால் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை சீனாவில் உள்ள இந்திய வங்கிகளில் டெபாசிட் செய்ய முடியாது என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
சீனாவில் 7 இந்திய வங்கிகள்:
சீனாவில் உள்ள பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இங்கு, ஏழு இந்திய வங்கிகள் செயல்படுகின்றன. கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக, சமீபத்தில் இந்தியாவில் ரூ. 500, 1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. வரும் டிச. 30க்குள் பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அனுமதி மறுப்பு:
இதனையடுத்து சீனாவில் வாழும் இந்தியர்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக அங்குள்ள வங்கிகளை நாடினர். ஆனால் இந்தியாவில் செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ. 500, 1000 நோட்டுகளை டெபாசிட் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.
இந்திய தூதரகம் அறிவுறுத்தல்:
மாறாக, பழைய நோட்டுகளை இந்தியாவில் வாழும் அங்கீகரிக்கப்பட்ட தங்களது உறவினர் அல்லது நண்பரது வங்கிக் கணக்கில் செலுத்தி புதிய நோட்டுகளாக மாற்றிக் கொள்ளும்படி, சீனாவில் உள்ள இந்திய துாதரகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக தங்களது அடையாள அட்டை நகல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நபர் பணம் செலுத்துவதற்காக அதிகாரமளிக்கும் கடிதம் ஒன்றை வழங்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.