புதுச்சேரி: தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ், அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அதிமுக வேட்பாளர் ஓம்சக்திசேகர் மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுவை ெநல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் - அதிமுகவினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரசார் லெனின் வீதியில் நேற்று ஆட்டோ பிரசாரம் மேற்கொண்டிருந்தனர். அப்போது கடந்த பொதுத்தேர்தலில் ரங்கசாமியை கடுமையாக விமர்சித்து ஜெயலலிதா பேசிய வசனங்களை ஒலிபரப்பி சென்றதாக தெரிகிறது.
இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து, அந்த ஆட்டோவை மறித்து ஒலிபெருக்கி உபகரணங்கள், பெண்டிரைவ் ஆகியவற்றை பிடுங்கியுள்ளனர். இதை காங்கிரசார் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காயமடைந்த காங்கிரஸ் பிரமுகர் அய்யப்பன் உள்ளிட்ட சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இருதரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழல் நிலவி பதற்றம் அதிகமாகவே உருளையன்பேட்டை போலீசார், பறக்கும் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். காங்கிரஸ் பிரமுகர் ஓம்சக்தி சேகர் மகன் கவியரசன் மீது உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உரையை தேர்தல் பிரசாரத்துக்கு காங்கிரசார் பயன்படுத்துவதாக. 3 நாட்களுக்கு முன்பே மாவட்ட தேர்தல் அதிகாரி சத்தியேந்திர சிங் துர்சாவத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையென அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.