போபால்: போபாலில் எஸ்பிஐ வங்கியின் காசாளர் ஒருவர் பணியின் போது நெஞ்சுவலி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து பொது மக்களும் வங்கி ஊழியர்களும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
எஸ்பிஐ-யின் ரடிபாத் கிளையில் பணியாற்றி வந்தவர் புருஷோத்தமன் (45). ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில், இவர் வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துவிட்டனர்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்குப் பிறகே அவரது மரணத்துக்கான காரணம் குறித்து தெரிய வரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.