500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு தொடர்பாக மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் உயர்நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள பொதுநல வழக்குகளுக்கு தடைவிதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில் மத்திய அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் முகுல் ரோகத்கி ஆஜராகி தனது வாதத்தை வைத்தார்.
அதன்படி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களின் தற்போதைய நிலைமை, புதிய நோட்டுக்களின் புழக்கம் ஆகியவை பற்றி கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
கடந்த வாரத்தை போல் இப்போது ATM-களில் கூட்டம் இல்லை என்றும், 10 பேர் அளவில் தான் வரிசையில் நிற்கிறார்கள் என்றும் தெரிவித்த அவர், வரும் நாள்களில் நிலைமை சீராகிவிடும் என்றும் கூறினார்.
மாநில உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்கள் ஆகியவற்றில் ரூபாய் நோட்டுகள் குறித்து தொடரப்பட்ட வழக்குகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
ஆனால் மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், நிலைமையை சீராக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?. பிரச்சனைகள் எப்போது முடிவுக்கு வரும்? என்பது பற்றிய ஒரு அறிக்கையை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், இது பற்றிய கருத்துக்களைத் தெரிவிக்குமாறு மனுதாரர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
English Summary:
500 and 1000 banknotes invalid, the notification to the county courts and the High Court upheld in the public interest lawsuits and a ban would not be the Supreme Court has refused.