புதுடில்லி: அரசு ஊழியர்களுக்கு மாத சம்பளம் ரொக்கமாக வழங்கப்பட மாட்டாது என மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதன்மூலம் மாத சம்பளத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் என்ற அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிராகரிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு உதவி :
டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த சக்திகாந்த தாஸ், அரசு தொடர்ந்து நிலையை கண்காணித்து வருகிறது. விவசாயிகளுக்கு உதவும் வகையிலான முடிவுகளை அரசு எடுத்து வருகிறது. விவசாயிகள் தங்கு தடையின்றி விவசாய கடன் பெறும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு நபார்டு வங்கிகள் மூலம் ரூ.21,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு தேவையான ரூபாய் நோட்டுக்களை விநியோகம் செய்யும்படி நபார்டு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆன்லைன் பணபரிவர்த்தனை :
ஆன்லைன் பணபரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் டிசம்பர் 31ம் தேதி வரை ஆன்லைன் ரயில்வே டிக்கெட் முன்பதிவிற்கு சேவை வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதே போன்று டெபிட் கார்டுகளுக்கும் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு மாத சம்பளம் ரொக்கமாக வழங்கப்பட மாட்டாது. இதுவரை 82,000 ஏடிஎம்.,க்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் அனைத்து ஏடிஎம்.,க்களும் மாற்றி அமைக்கப்பட்டு, மக்களுக்கு தட்டுப்பாடின்றி பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
அச்சடிக்கும் பணி தீவிரம் :
இ வாலட்களுக்கான வரம்புகளை ரிசர்வ் வங்கி ஏற்கனவே தளர்த்தி உள்ளது. இதன் மூலம் மின்னணு பணபரிவர்த்தனைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணம் அச்சடிக்கும் அச்சகங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன. இதனால் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு மிக விரைவில் சரியாகும். மொபைல் பண பரிவர்த்தனைகளுக்கும் டிசம்பர் 31ம் தேதி வரை கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு துறைகளும் மின்னணு பணபரித்தனை முறைகளையே பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம். ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக நான் மட்டும் பேச மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
English Summary:
The monthly salary of civil servants will be paid in cash as the Federal Department of Economic Affairs Secretary caktikanta Das said emphatically.