சீக்கியர்களின் 10-ஆவது குருவான குரு கோவிந்த் சிங்கின் 350-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்ககான உயர்நிலைக் குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் உள்ளிட்டோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
முகலாய அரசர்களின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற மத ரீதியிலான அராஜகங்களுக்கு எதிராக தீரத்துடன் போரிட்டவர் குரு கோவிந்த் சிங். இவர் சீக்கியர்களின் கடைசி குருவாக போற்றப்படுகிறார்.
இவரது 350-ஆவது பிறந்தநாள் விழா அடுத்த மாதம் 22-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இவ்விழா விமரிசையாகக் கொண்டாடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். மேலும், இதற்காக ரூ.100 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, குரு கோவிந்த் சிங்கின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கான உயர்நிலைக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தக் குழுவில் முன்னாள் பாஜக எம்.பி. நவ்ஜோத் சிங் சித்து, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, லோக் ஜனசக்திக் கட்சித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் உள்ளிட்டோர் ஏற்கெனவே உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்நிலையில், இந்த உயர்நிலைக் குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.