
நாட்டு மக்கள் சந்திக்கும் மிகப்பெரிய துன்பத்துக்கு பிரதமர் நரேந்தி மோடிதான் காரணம் என்றும் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார். 1,000 ரூபாயை ஒழித்து ரூ.2,000 கொடுத்தால் கறுப்புப் பணம் ஒழியாது என்று திருநாவுக்கரசர் பேட்டியளித்தார். 2,000 ரூபாய் வேண்டும் என்று பொதுமக்கள் யாராவது மத்திய அரசிடம் கேட்டார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மக்கள் பட்டினி:
2,000 ரூபாயை வைத்துக் கொண்டு சில்லரை இன்றி மக்கள் பசியும் பட்டினியுமாக அலைகின்றனர். ரூ.2,000 வைத்துக்கொண்டு டீ குடிக்கக்கூட வழியில்லாமல் இந்தியா முழுவதும் மக்கள் வேதனைப்படுகின்றனர். 100 ரூபாய் சில்லறை கிடைக்காமல் அனைவரும் அவதிப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
குஷ்பு பேட்டி:
ரூபாய் நோட்டு மாற்றம் அறிவிப்பால் மக்கள் பெரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என குஷ்பு தெரிவித்துள்ளார். 50 நாட்கள் இதே நிலை நீடிக்கும் என்று மோடி அறிவித்திருப்பதால் மக்கள் மேலும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர் என குஷ்பு தெரிவித்துள்ளார். மருத்துவமனைகளில் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை வாங்காததால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர் என்றும் குஷ்பு தெரிவித்தார்.