புதுடில்லி: ரூபாய் நோடடு வாபஸ் பெறப்பட்டதில், மக்களுக்கு அவதி ஏற்பட்டுள்ளது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறயுள்ளார்.
பிரதமர் பங்கேற்பு:
ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்ட விவாகாரத்தில் ராஜ்யசபாவில் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கடசிகள் வலியுறுத்தின. இந்த விவாதத்தில், பிரதமர் பங்கேற்று பதிலளிக்க வேண்டும் எனக்கூறி அமளியில் ஈடுபட்டனர். இதனால் ராஜ்யசபா நடவடிக்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், விவாதத்திற்க தயார் என மத்திய அரசு அறிவித்தது. பிரதமர் பங்கேற்று பதிலளிப்பார் எனவும், இந்த விவாதத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேச வேண்டும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார். தொடர்ந்து இந்த விவாதத்தில், பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டனர்.
அவதி:
மன்மோகன் பேசும்போது, ‛நாட்டின் நலனுக்கான நடவடிக்கை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், பிரதமரின் முடிவு மிகப்பெரிய தவறான நிர்வாக முடிவு. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் ஏழை மக்கள் அவதிப்படுகின்றனர். 50 நாள் தடை என்பது ஏழை மக்களுக்கு பெரிய இடியாக அமைந்துவிட்டது. அவகாசம் மிகக்குறைவு. எந்த நாட்டிலாவது பணம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதா? ரூபாய் நோட்டு வாபசால், நாட்டின் ஜி.டி.பி., 2 புள்ளிகள் குறைந்துவிட்டது. அமைப்பு சாரா தொழில்கள் முற்றிலும் முடங்கிவிட்டது. கூட்டுறவு சேவை முற்றிலும் முடங்கிவிட்டது. மத்திய அரசின் நடவடிக்கையை கண்டிக்கிறேன்.
நம்பிக்கை இல்லை:
ரூபாய் நோட்டு வாபசால் 65 பேர் பலியாகியுள்ளனர். ஏழை மக்களின் தினசரி நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை இல்லை. மோசமான நிர்வாகத்திற்கு உதாரணமாக ரிசர்வ் வங்கி மாறிவிட்டது. ரூபாய் நோட்டு மீதான நம்பிக்கை போய் விவட்டது. விளைவுகளை குறைத்து மதிப்பிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை இது. அரசின் நடவடிக்கையால் நாட்டில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. சாத்தியமான திட்டங்களை அறிவிக்க வேண்டும் என பிரதமரை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
முன்னதாக இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய காங்., மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்ட திட்டத்தை காங்கிரஸ் எதிர்க்கவில்லை. இதில் அரசின் அணுகுமுறையை தான் எதிர்க்கிறோம். அரசின் நடவடிக்கையால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர் என்றார்.
லோக்சபா ஒத்திவைப்பு:
லோக்சபா துவங்கியதும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, சமாஜ்வாதி எம்.பி., அக்சய் யாதவ் பேப்பரை வீசினார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், நாள் முழுவதும் லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.
English Summary:
In rupee derived notes withdrawn, as experienced by the former Prime Minister Manmohan Singh said that people got troubled