வாஷிங்டன்:ஒபாமா சுகாதார காப்பீடு தொடரும் என டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் ஒபாமா தனது ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த மிக முக்கியமான திட்டம், சுகாதார காப்பீடு திட்டம். இந்த திட்டத்தின்மூலம் குறைவான கட்டணத்தில் சாமானிய மக்களும் காப்பீடு பலன் பெற வழி பிறந்தது.ஆனால் 'ஒபாமா கேர்' என்னும் இந்த சுகாதார காப்பீடு திட்டத்துக்கு எதிரான கருத்துக்களை டொனால்டு டிரம்ப், தனது தேர்தல் பிரசாரத்தின்போது கூறி வந்தார்.
திடீர் பல்டி:
குறிப்பாக, இந்த திட்டத்தை ரத்து செய்யப்போவதாகவும் தெரிவித்தார்.ஆனால் இப்போது ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில் டிரம்ப், இந்த விஷயத்தில் பல்டி அடித்து விட்டார். 'ஒபாமா கேர்' திட்டத்தின் முக்கிய அம்சங்களை அப்படியே பின்பற்றுவதற்கு திறந்த மனதுடன் இருப்பதாக அவர் கூறி உள்ளார்.
இது குறித்து பத்திரிகைக்கு பேட்டி அளித்த டிரம்ப், “பெற்றோரின் காப்பீட்டில், அவர்களது இளம்பிள்ளைகளும் பலன் பெறுவதை அனுமதிக்கப் போகிறேன்” என்று குறிப்பிட்டார்.ஒபாமா கேர்' திட்டத்தின் முக்கிய அம்சங்களை அப்படியே பின்பற்றுவதற்கு திறந்த மனதுடன் இருப்பதாகவும் ஒபாமாவுடனான சந்திப்புக்கு பின்னர்தான், இந்த முடிவுக்கு வந்துள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.