புதுடில்லி: பி.சி.சி.ஐ., நிர்வாகிகளை ஒட்டுமொத்தமாக நீக்க வேண்டும் என, லோதா குழு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்திய கிரிக்கெட் போர்டில் (பி.சி.சி.ஐ.,) செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து, சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின் படி, லோதா குழு பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது.
இவற்றை வரும் டிசம்பர் 3ம் தேதிக்குள் நடைமுறைப்படுத்த சுப்ரீம் கோர்ட் அவகாசம் வழங்கியது. ஆனால், இதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், பி.சி.சி.ஐ., காலம் தாழ்த்தி வருகிறது. இதையடுத்து, பி.சி.சி.ஐ., மற்றும் மாநில சங்கங்கள் பண பரிவர்த்தனை செய்ய சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது.
இதனிடையே, லோதா குழு சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் புதிய பரிந்துரை அடங்கிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில், தற்போதைய பி.சி.சி.ஐ., மற்றும் மாநில சங்க நிர்வாகிகளை ஒட்டுமொத்தமாக நீக்கவேண்டும். முன்னாள் உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை என்பவரை பி.சி.சி.ஐ., பார்வையாளராக நியமிக்க வேண்டும் என, தெரிவித்துள்ளது. இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.
என்ன நடக்கும்:
ஒருவேளை லோதா பரிந்துரை ஏற்கப்பட்டு, நிர்வாகிகள் நீக்கப்பட்டால், புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படும் வரை ஜி.கே.பிள்ளை பொறுப்பில் இருப்பார்.
பி.சி.சி.ஐ.,க்கு உடனடியாக அரசின் சார்பிலான ஆடிட்டர் நியமிக்கப்படுவார். அடுத்து வரும் ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்கள் ஏலம், நேரடி
ஒளிபரப்பு உரிமை போன்ற விவகாரங்களில் இவர் முடிவு எடுப்பார். இதனால், பி.சி.சி.ஐ.,க்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
English Summary:
BCCI administrators to remove altogether, the report was filed in the Supreme Court on behalf of Lodha Group. Indian cricket board (BCCI) about the need to reform, the Supreme Court guidelines, Lodha Group offered several suggestions.