லக்னோ: உ.பி., சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்த இறுதி முடிவை கட்சியின் தேசியத் தலைவரான முலாயம் சிங் யாதவ் எடுப்பார் என் அம்மாநில முதல்வரும், கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
நான்குமுனை போட்டி:
உ.பி., சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க ஆளும் கட்சியான சமாஜ்வாதி தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எனினும் அங்கு குடும்ப அரசியலால் உட்கட்சிப் பூசல் எழுந்துள்ளது. உ.பி.,யை கைபற்ற சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், பா.ஜ., காங்., என நான்குமுனை போட்டி நிலவுகிறது.
முலாயம் முடிவெடிப்பார்:
இந்நிலையில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அகிலேஷ் யாதவ் தெரிவித்ததாவது: உ.பி.,யில், மெகா கூட்டணி அமையுமா என்பதை நான் கூற முடியாது. இந்த விஷயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம், சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவிற்கே உண்டு; அப்படி ஒரு கூட்டணி அமையும் என்றால் அதை யாரும் தடுக்க முடியாது. இவ்வாறு தெரிவித்தார்.
ரகசிய பேச்சுவார்த்தை:
இந்நிலையில் அகிலேஷ் யாதவை காங்., கட்சியின் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். லக்னோவில் 3 மணி நேரம் நடந்த இந்த ரகசிய பேச்சுவார்த்தை உ.பி., தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன்மூலம் சமாஜ்வாதி-காங்., இடையே கூட்டணி அமையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.