கான்பூர் : உ.பி., மாநிலம் கான்பூர் அருகே பாட்னா - இந்தூர் ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இதில் இதுவரை 45 பேர் பலியாகி உள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
விபத்து தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள மோடி, பாட்னா - இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளான செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். விபத்து மற்றும் மீட்புப் பணிகளை தொடர்ந்து கண்காணித்து வரும் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவுடன் பேசி உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
English Summary:
Kanpur, UP, New York, near Kanpur, Patna - Indore train derailed and crashed. In which 45 people have died so far. Modi expressed grief to the families of the victims of this accident