ராஜஸ்தான்: 500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு குறித்து அம்பானி, அதானி குழுமத்திற்கு முன்பே தெரியும் என ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ பவானி சிங் கூறிய விடியோ சமூக தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து மக்கள் வங்கியிலும், ஏடிஎம்களிலும் கால்கடுக்க நின்றிருக்கும் நிலையில் ராஜஸ்தான் சட்டப்பேரவை பாஜக உறுப்பினர் பவானி சிங் ஒரு பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த 8-ஆம் தேதி மாலை முதல் புழக்கத்தில் இருந்த 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
இந்த நிலையில், ராஜஸ்தான் பேரவையின் பாஜக உறுப்பினர் பவானி சிங், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தபோது, "ரூபாய் நோட்டு மாற்று நடவடிக்கை அம்பானி, அதானி குழுமத்திற்கு முன்பே தெரியும்" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.
மேலும், புதிதாக அச்சடிக்கப்பட்டுள்ள ரூபாய் நோட்டுகளின் தரம் "கள்ள நோட்டு" போன்றே இருப்பதாகவும் அவர் கூறிய விடியோப் பதிவில் உள்ளது. இந்த விடியோ சமூகவலைத்தளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில், இந்த வீடியோ குறித்து எம்.எல்.ஏ பவானி சிங் மறுப்பு தெரிவித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், "நான் ஒருபோதும் பேட்டியில் அவ்வாறு கூறவில்லை, அந்த வீடியோ செயற்கையாக தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் பேட்டிக்கு பின் சில பத்திரிக்கையாளருடன் பேசி கொண்டிருந்தததை திரித்து வீடியோவாக வெளியிட்டுள்ளனர்" என்று கூறியுள்ளார்.
Summary : 500, 1000 notes that the declaration is not valid Ambani, Adani group knew before the Rajasthan BJP MLA Bhawani Singh's video-based social platforms is spreading like viral.