நிகழாண்டு சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வுக்கு தாளால் ஆன நுழைவுச் சீட்டு (அட்மிட் கார்ட்) வெளியிடப்பட மாட்டாது என்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் யுபிஎஸ்சி அமைப்பால், சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வுகள் அடுத்த மாதம் 3-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரையிலும் நடத்தப்படவுள்ளன. இந்நிலையில், மத்திய அரசுப் பணியாளர்
தேர்வாணையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு எழுதுவோருக்கான அட்மிட் கார்டை யுபிஎஸ்சி அமைப்பு, தனது இணையதளமான
ரரர.மடநஇ.எஞய.ஐச என்ற முகவரியில் வெளியிட்டுள்ளது. அந்த இணையதள முகவரிக்கு சென்று, மெயின் தேர்வு எழுதுவோர் தங்களது அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
சம்பந்தப்பட்ட மையத்தில், இணையதளத்தில் இருந்து தாங்கள் பதிவிறக்கம் செய்த அட்மிட் கார்டை காண்பிக்கும்படியும் அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஒருவேளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அட்மிட் கார்டில் அவரது புகைப்படம் தெளிவாக இல்லாதபட்சத்தில், தேர்வு எழுதும் நபர்கள் தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவற்றில் ஏதேனும் ஓர் அடையாள அட்டையுடன் தங்களது புகைப்படத்தை எடுத்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில், இந்த மெயின் தேர்வுக்கு தாளால் ஆன அட்மிட் கார்டை யுபிஎஸ்சி அமைப்பு வெளியிடாது.
இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அட்மிட் கார்டை ஒவ்வொரு முறையும் தேர்வு எழுத வருவோர் மையத்துக்கு கொண்டு வர வேண்டும். எழுத்துத் தேர்வு முடிவு வரும் வரையிலும், இதுவே அவரது சான்றாக கருதப்படும். இதில் ஏதேனும் முரண்பாடு காணப்படும் பட்சத்தில், தேர்வு எழுதும் நபர்கள், யுபிஎஸ்சியை 011-23381125, 23098543, 23385271 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் போன்ற பதவிகளுக்கு நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வுகள், முதல்நிலை, மெயின், நேர்முகத் தேர்வு என்று 3 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.