தமிழகத்தில் பொருளாதார நெருக்கடி நிலைமை அறிவிக்கப்பட இருக்கிறதா? என்பது குறித்து பதிலளிக்கும்படி மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதி துறைக்கு தமிழக அரசு போதிய நிதி வழங்க வலியுறுத்தி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், வழக்கறிஞர் வசந்தகுமார் ஆகியோர் தொடர்ந்த வழக்குகள் மற்றும் உயர்நீதிமன்றம் தாமாக விசாரணைக்கு ஏற்ற வழக்கு ஆகியவற்றை தலைமை நீதிபதி அமர்வு நேற்று விசாரித்தது. இதில் தமிழக தலைமைச் செயலர் மற்றும் மாநில உள்துறைச் செயலர் தரப்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அப்போது நீதித்துறை உள்கட்டமைப்பு வசதிகளுக்கும், நீதி துறையை நடத்துவதற்கும் போதிய நிதி ஒதுக்காதது வேதனை அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் மத்திய அரசிடம் இருந்து நிதியைப் பெறுவதில் மாநில அரசு திறமையுடன் செயல்படாததையும் நீதிபதிகள் சுட்டிகாட்டினர். பொருளாதார நெருக்கடி நிலையில் இருப்பதாக தமிழக அரசு அறிவிக்கப் போகிறதா? என்பது குறித்து பதிலளிக்கும் படியும் தமிழக நிதிதுறைச் செயலாளருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.