நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் காவிரி விவகாரத்தை எழுப்ப அனுமதிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்திய தமிழக எம்.பி.க்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது போல நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமார் குறுக்கிட்டார். இதையும் மீறி அதிமுக, திமுக, இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளைக் கூட்டத்தில் பதிவு செய்தனர்.
தில்லியில் மக்களவை, மாநிலங்களவை ஆகியவற்றில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் டாக்டர் பி.வேணுகோபால், துணைத் தலைவர் நவநீதகிருஷ்ணன், மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதில், நவநீதகிருஷ்ணன் காவிரி விவகாரத்தை எழுப்ப முற்பட்ட போது குறுக்கிட்ட அனந்த் குமார், "காவிரி விவகாரத்தை திங்கள்கிழமை கூட்டத்திலேயே வேணுகோபால் பேசிவிட்டார். அதை தவிர்த்து விட்டு மற்ற விஷயங்களை பேசுங்கள்' என்றார். அவரது கருத்தை மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆமோதித்தார். (இவர்கள் இருவரும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்).
இதையடுத்து, அதிமுக தரப்பு கருத்தை நவநீதகிருஷ்ணன் முழுமையாகப் பேச அனுமதிக்குமாறு பி.வேணுகோபால், டி.ராஜா, டி.கே.ரங்கராஜன் ஆகியோர் வலியுறுத்தினர்.
இதற்கு மத்தியில் நவநீதிதகிருஷ்ணன் பேசியதாவது: "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு தவறான நிலைப்பாட்டை மேற்கொண்டு மிகப் பெரிய தவறிழைத்து விட்டது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி மேலாண்மை வாரியம் அமைக்காமல் அந்த அமைப்பை உருவாக்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய அரசு கூறுவது ஏற்புடையது அல்ல. ரூபாய் நோட்டுகள் கட்டுப்பாடு விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையால் வங்கிகளில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், மோதல் போன்ற காரணங்களால் தமிழகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். விலைவாசியை கட்டுப்படுத்தும் விவகாரத்திலும் மத்திய அரசு தவறிவிட்டது. இதுபற்றி எல்லாம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேச அனுமதிக்க வேண்டும்' என்றார்.
முன்னதாக, நவநீதகிருஷ்ணன் கருத்தை ஆதரித்த டி.கே.ரங்கராஜன், "காவிரி விவகாரத்தை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவரிக்கக் கூடாது என்று ஏன் தடுக்கிறீர்கள்? மத்திய அமைச்சராக இருக்கும் அனந்த் குமார் நடுநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும்' என்றார்.
இதைத் தொடர்ந்து, கனிமொழி பேசுகையில், "மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் மசோதாவை நிறைவேற்ற எதிர்வரும் கூட்டத்தொடரிலும் மத்திய அரசு தயாராக இல்லாதது வருத்தம் அளிக்கிறது. நதிகள் இணைப்பு, நதி நீர்ப் பங்கீடு விவகாரம் போன்றவற்றுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. ரூபாய் நோட்டு கட்டுப்பாடு விவகாரத்திலும் மத்திய அரசு கடைப்பிடிக்கும் அணுகுமுறையால் சாதாரண மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா பேசும் போது, "22 நாள்கள் கொண்ட குளிர்காலக் கூட்டத்தொடரில் 25 விஷயங்களை நாடாளுமன்ற அலுவல் பட்டியலில் மத்திய அரசு சேர்த்துள்ளது. ரூபாய் நோட்டு கட்டுப்பாடு, ஜம்மு காஷ்மீர் ஊரடங்கு உத்தரவு நிலைமை, போபால் என்கவுன்ட்டர் சம்பவம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்னைகளை விவாதிக்க வேண்டும். காவிரி விவகாரம் போல பல மாநிலங்களிடையேயும் நிலவும் நீர்ப் பங்கீடு பிரச்னைக்குத் தீர்வாக தேசிய நதி நீர்க் கொள்கையை உருவாக்க வேண்டும். தமிழக மீனவர்கள் பிரச்னையை விவாதிக்கவும் முன்னுரிமை தர வேண்டும்' என்றார்.
நதி நீர்ப் பங்கீடு விவகாரம் என்று தமிழக உறுப்பினர்கள் பேசத் தொடங்கிய போதெல்லாம் அனந்த் குமார், "இந்த விஷயத்தை தவிர்த்து மற்ற விஷயங்களை பேசுங்கள்' என்றபடி கூறினார். இருப்பினும் அதைப் பொருள்படுத்தாமல் தங்கள் கருத்துகளை தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் பதிவு செய்தனர்.