சில்லறை தட்டுப்பாடு காரணமாக, நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த 3 நாட்களில் 40 காசுகள் குறைந்துள்ளது.
நாமக்கலில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 82 காசுகளிலிருந்து 20 காசுகள் குறைந்து 3 ரூபாய் 62 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களில் முட்டை ஒன்றுக்கு 40 காசுகள் குறைந்துள்ளது.
இது குறித்து கோழிப்பண்ணையாளர்கள் கூறும் போது, சில்லறை தட்டுப்பாடு காரணமாகவே முட்டை விலை குறைந்துள்ளதாக கூறினர்.
மேலும் இதன் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணையாளர்களுக்கு தினமும் 3 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
English Summary:
Because of shortages, Namakkal zone egg price decreased by 40 paise in the last 3 days.