
உயர் மதிப்பு கொண்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கை கடந்த 10ஆம் தேதி மத்திய அரசால் தொடங்கப்பட்டது, இது ஊழல், கருப்பு பணம், தீவிரவாதம் மற்றும் கள்ள நோட்டுக்கு எதிராக பிரதமர் எடுத்த மிகப்பெரிய நடவடிக்கை என பாபா ராம்தேவ் குறிப்பிட்டார்.
எனினும், மத்திய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக மக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனரே என்ற கேள்விக்கு, சிலர் இது தொடர்பாக பாதிப்படைந்துள்ளதாகவும், மத்திய அரசு மீது குற்றம் சுமத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மத்திய அரசு மீது குற்றம் சுமத்துவதை விட்டுவிட்டு, ஊழலுக்கு எதிரான இந்த மிகப்பெரிய நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், போர் ஏற்படும் போது நமது ராணுவ வீரர்கள் உணவின்றி பல வாரங்களுக்கு பல்வேறு இன்னல்களை அனுபவிக்கின்றனர் என்றும், நாட்டு நலனுக்காக சிறிது நாட்களுக்கு நம்மால் இதனை பொறுத்துக்கொள்ள முடியாதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், முதல்முறையாக, தைரியமான முடிவெடுக்கும் தூய்மையான அரசியல்வாதி நமக்கு கிடைத்துள்ளதாகவும், அவர் அரசியல், ரியல் எஸ்டேட் மற்றும் சர்வதேச மாஃபியா கும்பல்களுக்கு எதிராக செயல்படுகின்றார் என்றும் ராம்தேவ் கூறினார்.