அதிபர் பார்க் குன் ஹையை மையமாக வைத்து நடைபெற்றுள்ள அரசியல் மோசடியை புலனாய்வு செய்வதன் ஒரு பகுதியாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
அதிபரின் தோழி சோய் சூன் சில்
இந்த மோசடியின் முக்கிய நபராக இருக்கும் அதிபரின் நெருங்கிய நண்பரும் உயிர் தோழியுமான சோய் சூன் சில்-இன் மகளுக்கு, சாம்சங் முறையற்ற நிதி உதவி வழங்கியிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
பார்க் குன் ஹை சோய் சூன் சில்லுடன் வைத்திருந்த நட்புறவில் “அதிக நம்பிக்கை“ வைத்திருந்ததாக அதிபர் பார்க் குன் ஹை தெரிவித்திருக்கிறார்
அரசியலில் தலையிடவும், வணிக நன்கொடைகளை பெற்றுகொள்ளவும் அதிபரோடு இருக்கும் நட்புறவை பயன்படுத்தி கொண்டார் என்று சோய் சூன் சில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
எந்தவொரு புலனாய்விற்கும் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.