வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவு அமைச்சராக தெற்கு கரோலினா மாகாண கவர்னர் நிக்கி ஹாலே நியமிக்கப்படலாம் எனக்கூறப்படுகிறது, அவரது பெயர் தீவிர பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சரவை:
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் விரைவில் பதவியேற்க உள்ளார். அமைச்சரவையில் இடம்பெறுபவர்கள் குறித்து தீவிர ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. தேர்தலில் தோல்வியடைந்த ஹிலாரி கிளிண்டன் வகித்த வெளியுறவு அமைச்சர் பதவிக்கு பலரது பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. முன்னாள் நியூயார்க் மேயர் ருடால்ப் கியூலியானி, ஐ.நா.,வுக்கான முன்னாள் தூதர் ஜான் போல்டன், சென்ட் வெளியறவு அமைச்சக குழு முன்னாள் தலைவர் பாப் கார்கர், முன்னாள் சபாநாயகர் கிங்ரிச் ஆகியோரது பெயர்கள் தீவிரமாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இவர்களுடன் அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே பெயரும் தீவிர பரிசீலனையில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவரது இயர்பெயர் நிம்ரதா ரந்தவா ஆகும். குடியரசு கட்சி மூத்த தலைவரான இவர் டிரம்ப்பை கடுமையாக விமர்சித்து வந்தார். இதற்கு டிரம்ப் பதிலடி கொடுத்தார். முன்னதாக இவரது பெயர் துணை அதிபர் பதவிக்கு பரிசீலனை செய்யப்பட்டு, பின்னர் கைவிடப்பட்டது.
அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பதவிக்கு டெட் குரூஸ் பெயர் பரிசீலனை செய்யப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சர் பதவிக்கு கெல்லி அயோட் பெயர் பரிசீலனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் பதவிக்கு பாபி ஜிண்டால் பெயர் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.
English Summary:
US Secretary of State for South Carolina governor Nikki Halle man who hired her name was stated to be serious consideration.