புதுடில்லி: சமீபத்திய மத்திய அரசின் புதிய ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக மோடி அரசை கண்டித்து மம்தா, எதிர்கட்சியினர் ஆதரவுடன் வரும் 28 ம் தேதி பந்த் நடத்த திட்டமிட்டுள்ளார். ஆனால் மோடிக்கு ஆதரவாக இருப்பதை காட்டும் விதமாக பொதுமக்கள் பலரும் அன்று கூடுதலாக 2 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என சமூக வலை தளங்களில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பு வைரலாக பரவி வருகிறது.
கடந்த 8 ம் பிரதமர் மோடி , ரூ. 500, 1000 செல்லாது என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதனால் கருப்பு பணம் ஒழிக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டு கொண்டார். ஆனால் பல்வேறு எதிர்கட்சியினர் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். பார்லி.,யில் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வரும் 28ம் தேதி மேற்குவங்க முதல்வர் மம்தா நாடு தழுவிய பந்த் நடத்த எதிர்கட்சியினரை ஒன்று சேர கேட்டுள்ளார். ஜனாதிபதியை சந்தித்து, இது தொடர்பான மனுவை அளி்க்கவுள்ளார்.
பந்துக்கு எதிர்ப்பு:
ஆனால் கருப்பு பணம் ஒழிப்பில் ஆர்வம் காட்டுபவர்கள், நாட்டின் நலனில் அக்கறை கொண்டவர்கள் இந்த பந்தை முறியடிக்க வேண்டும் என சமூக வலை தளங்களில் அழைப்பு விடுத்து வருகின்றனர். வரும் 28 ம் தேதி திங்கட்கிழமை கூடுதலாக 2 மணி நேரம் பணியாற்றி மம்தாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
இது போன்ற தகவல் தற்போது வாட்ஸ்அப், மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
English Summary:
The latest issue of the federal government's new bill condemning Modi Mamata government, with the support of the opposition is planning to hold the ball on the 28. The viral spread of the call.