
இன்று முதல் ரத்து :
இண்டெர்நெட் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டிற்கு சேவை வரி தள்ளுபடி செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று(நவ., 23) முதல் நடைமுறைக்கு வரும் இச்சலுகை, டிச., 31ம் தேதி வரை அளிக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுகளற்ற பணப்பரிவர்த்தை
னையை ஊக்குவிக்கும் வகையில் ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சேவை வரி :
ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் 2-ம் வகுப்பு படுக்கை வசதி டிக்கெட்டுக்கு ரூ.20-ம், குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளுக்கு ரூ.40-ம் சேவை வரியாக வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary:
IRCTC, Internet service tax collected by the railway ticket booking has been canceled from today