புதுடில்லி : வெளிநாட்டுக்கு தப்பியுள்ள, தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடுகடத்தும்படி இங்கிலாந்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடன் பாக்கி:
பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா மீது, 9,000 கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்துள்ளதாக,பல்வேறு வங்கிகள் வழக்குதொடர்ந்தன. அதை தொடர்ந்து, மல்லையா, பிரிட்டனின் லண்டன் நகருக்கு தப்பிச் சென்றார். அவர் மீது, நாட்டின் பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் நடந்து வருகின்றன.
மோடி- தெரசா மே சந்திப்பு :
மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது தொழில் அதிபர் விஜய் மல்லையா, ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழலில் தொடர்புடைய கிறிஸ்டியன் மைக்கேல் உள்பட 60 பேரை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இங்கிலாந்து தரப்பிலிருந்து 17 பேரை திரும்ப ஒப்படைக்க இந்தியாவிடம் கோரிக்கை விடப்பட்டது.
சுமூக தீர்வு:
இப்பேச்சுவார்த்தையில் தப்பியோடி தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக, அவர்களை நாடு கடத்தி சுமுகமாக தீர்வு காண்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.