புதுடில்லி: பிரதமர் மோடி ஏன் பார்லிமென்டிற்கு வருவதில்லை என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கேள்வி எழுப்பினார்.
இரங்கல்:
பார்லிமென்ட் வளாகத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய ராகுல் கூறியதாவது: கான்பூர் ரயில் விபத்திற்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். புல்லட் ரயில் குறித்து மட்டுமே பிரதமர் மோடி பேசுகிறார். ஆனால், ரயில் பயணத்திற்கு பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் என்ன?
தன்னிச்சையாக முடிவு:
பெரிய பொருளாதார முடிவுகளை ஆலோசனை நடத்தாமல் பிரதமர் எடுத்துள்ளார். இன்று காலை வரிசையில் நின்ற மக்களை நான் சந்தித்த போது, அவர்கள் பிரச்னைகளை சந்திப்பதை கவனித்தேன். தாங்கள் வரிசையில் நிற்பதாகவும், பணக்காரர்களுக்கு பின் வரிசையில் பணம் தரப்படுவதாகவும் மக்கள் புகார் கூறினர். பிரதமர் முடிவால் ஏழை மக்கள் பரிதவிக்கின்றனர். 15, 20 பேருக்காக கஜானாவை பிரதமர் திறக்கிறார். பிரதமர் தான் என்ன நினைக்கிறாரோ அதையே செய்கிறார். மற்றவர்களுடன் ஆலோசனை நடத்த பிரதமர் விரும்புவதில்லை. தன்னை சுற்றியுள்ள 15, 20 பேர் சொல்வதை மட்டுமே பிரதமர் கேட்கிறார்.
பின்வாசல் வழியாக பணக்காரர்களுக்கு பணம் கிடைக்கிறது. பணக்காரர்களுக்கு மட்டும் பிரதமர் ஆட்சி நடத்துகிறார். ரூபாய் நோட்டு வாபஸ் சில பணக்காரர்களுக்கு பலனளிக்கிறது. மக்கள் பயனடைய பிரதமர் மோடி என்ன செய்துள்ளார். பிரதமர் ஏன் பார்லிமென்டிற்கு வருவதில்லை. எனக்கூறினார்.
English Summary:
Rahul Modi questioned why prime minster didn't come to parliament.