சென்னை: அரசு கேபிள்‛டிவி' நிறுவனத்தின் இ - சேவை மையத்தில் ஓய்வூதியர்களுக்கான மின்னணு வாழ்வு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.இது குறித்து அரசு கேபிள்‛டிவி' நிறுவனம் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு கேபிள் ‛டிவி' நிறுவனம் தமிழகம் முழுவதும் 486 அரசு இ - சேவை மையங்களை அமைத்து, அரசின் பல்வேறு துறைகள் சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது, கூடுதல் சேவையாக நவ.,24 முதல் ஓய்வூதியதாரர்களுக்கு,‛ டிஜிட்டல் லைப் சர்டிபிகேட்' எனப்படும் மின்னணு வாழ்வு சான்றிதழ் வழங்கும் சேவை துவங்கப்பட உள்ளது.
கட்டணமாக, 10 ரூபாய்:
இந்த சான்றிதழ் பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள், இந்த நிறுவனத்தின் இ - சேவை மையத்தில் தங்கள் ஆதார் எண்ணை தெரிவித்து கைவிரல் ரேகையை பதிவு செய்து, ஓய்வூதியம் தொடர்பான தகவல்களை தெரிவித்தால், அவர்களுக்கு மின்னணு வாழ்வு சான்றிதழ் அச்சிட்டு வழங்கப்படும். இந்த சேவைக்கு கட்டணமாக, 10 ரூபாய் வசூலிக்கப்படும். இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.
English Summary:
Government kepiltivi 'Company C - service center, is not given to the government for pensions cable tv electronic life certificate' issued by the company