மும்பை: 'வாராக்கடன்களை வசூலிக்க, வங்கிகளுக்கு அளித்துள்ள, 2017 மார்ச் காலக்கெடுவில், எந்த மாற்றமும் இல்லை' என, ரிசர்வ் வங்கி, மீண்டும் உறுதி செய்துள்ளது.
அதிரடி நடவடிக்கை :
வங்கிகளின் வாராக்கடன்கள் அதிகரிப்பது, பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி, வாராக்கடன்களை வசூலிக்க மற்றும் குறைக்க, முந்தைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
2017 மார்ச்சுக்குள்...
இந்நிலையில், தற்போதைய கவர்னர் உர்ஜித் படேல், இந்த விவகாரத்தில், நடைமுறைக்கு ஏற்ற வகையிலும், பொருளாதாரத்தை பாதிக்காத வகையிலும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, சமீபத்தில் அறிவித்திருந்தார். அதே நேரத்தில், தங்கள் வரவு - செலவு கணக்கில், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், வாராக்கடன் பிரச்னையை சமாளிக்க, 2017 மார்ச்சுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
மாற்றம் இல்லை :
இந்நிலையில், மும்பையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர், என்.எஸ்.விஸ்வநாதன், ''இந்த காலக்கெடுவில் எந்த மாற்றமும் இல்லை; 2017 மார்ச் வரை தான், வங்கிகளுக்கு அவகாசம் உள்ளது,'' என, மீண்டும் உறுதிபடுத்தினார்.