தஞ்சாவூர்: - தஞ்சாவூர் புகழ்பெற்ற பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன், 1,031வது ஆண்டு சதய விழாவினை முன்னிட்டு, நேற்று பேரபிஷேகம் நடந்தது.உலகப் புகழ் பெற்று விளங்கும், தஞ்சை பெரிய கோவிலை எழுப்பிய ராஜராஜசோழன் பிறந்த நாளை, அவருடைய நட்சத்திர நாளான சதய தினத்தில், சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. சதய விழா, இரண்டாம் நாளான நேற்று காலை, 8:00 மணிக்கு திருமுறை வீதிஉலாவுடன், யானை மீது தேவாரம் திருவாசகத்தை வைத்து, ஊர்வலமாக ராஜராஜன் சிலை வரை எடுத்து செல்லப்பட்டு, அங்கு சோழன் சிலைக்கு புத்தாடை அணிவிக்கப்பட்டது.ராஜராஜன் உருவ சிலைக்கு பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் என, பலரும் மாலை அணிவித்தனர். முன்னதாக, காலை, 9:00 மணிக்கு பிரகதீஸ்வரருக்கு தேன், தயிர், மஞ்சள், பால், பழங்கள் ஆகிய, 48 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அபிஷேகத்தை காண பல்வேறு பகுதியில், இருந்து வந்த சுற்றுலா பயணிகள், சிவனடியார்கள் மற்றும் மக்கள் கலந்துக் கொண்டனர்.
நினைவு இடம் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள பழையாறையில் அரண்மனைக்கு அருகில் உள்ள ஓடத்தோப்பில் சமாதி அமைக்கப்பட்டதாகவும், அவர் சிவதீட்சை பெற்றவர் என்பதால், அவரது சமாதி அமைந்த இடத்தில் அவரது மகன் ராஜேந்திர சோழனால், மிகப்பெரியலிங்கம் வைக்கப்பட்டு நினைவுக்கோவில் அமைக்கப்பட்டது. சதய விழாவான நேற்று, அப்பகுதியைச் சேர்ந்த ஆன்மிகவாதிகளும், பொதுமக்களும் சமாதி மீது அமைந்துள்ள சிவலிங்கத்திற்கு அபிஷேகங்கள் செய்தும், மலர் மாலை அணிவித்தும், மலர்கள் துாவியும் பூஜைகள் செய்து வழிப்பட்டனர்.