கெய்ரோ: எகிப்தின் முன்னாள் அதிபர் மொர்சிக்கு, சிறை உடைப்பு தொடர்பான வழக்கில் கிரிமினல் கோர்ட் விதித்த மரண தண்டனையை, அந்நாட்டு தலைமை கோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
பயங்கர கலவரம் :
மத்திய தரைக்கடல் நாடுகளில் ஒன்றான எகிப்தில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக் தலைமையிலான அரசுக்கு எதிராக, 2012ல் பயங்கர கலவரம் வெடித்தது. முகமது மொர்சி தலைமையிலான முஸ்லிம் சகோதரத்துவ கட்சியினர், பொதுமக்கள் ஆதரவுடன் நடத்திய போராட்டத்தில், ஆட்சியிலிருந்து முபாரக் கவிழ்க்கப்பட்டார்; மொர்சி அதிபரானார்.
மரண தண்டனை :
அதற்குப் பின் நடைபெற்ற, மொர்சி அரசுக்கு எதிரான போராட்டத்தில், 2013ல், ஆட்சியை இழந்த மொர்சி மற்றும் அவரது அரசின் அமைச்சர்கள் சிறையில் தள்ளப்பட்டு உள்ளனர். ஏராளமான குற்றச்சாட்டுகளின் படி, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள மொர்சி மீது, 2012ல், சிறைகளை உடைத்து, கைதிகளை விடுவித்த வழக்கில், மொர்சி மற்றும் அவரின் ஆதரவாளர்கள், 130 பேருக்கும் மரண தண்டனை விதித்து, கிரிமினல் கோர்ட் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து எகிப்தின் தலைமை கோர்ட்டில் மொர்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
ரத்து:
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை கோர்ட் மொர்சிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் இவ்வழக்கின் விசாரணையை மீண்டும் முதலில் இருந்து துவங்கவும் உத்தரவிட்டுள்ளது.